விவசாயிகளுக்கு எதிரானவர் ஜெ.: கனிமொழி புகார்
திமுக தலைவர் கருணா நிதிக்கு ஆதரவு கோரி திரு வாரூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி பேசியது: மக்களை, அமைச்சர் களை, அலுவலர்களைச் சந்திக் காத ஜெயலலிதா, எந்தப் பிரச் சினையையும் தீர்க்கவில்லை. விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அவர், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுபவர். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலையைக் கூட தொடங்கவில்லை. இதற்கு மின் பற்றாக்குறையே முக்கியக் காரணம்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தியாவில் பாதுகாப்பற்ற மாநிலங்களில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. காவல் துறையை தன்னிடம் வைத்துள்ள ஜெயலலிதா, தனக்காக மட்டுமே அத்துறையைப் பயன்படுத்துகிறார். அதிமுக ஆட்சியில் மதுக் கடைகள் மட்டுமே வளர்ச்சி யடைந்துள்ளன. தேர்தலுக்கு மட்டுமே மக்களைச் சந்திக்கும் அவரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
