Published : 08 May 2016 11:38 AM
Last Updated : 08 May 2016 11:38 AM

மது ஒழிப்பில் திராவிட கட்சிகள் நாடகம்: அன்புமணி குற்றச்சாட்டு

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென் னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த 15 மாதங்களுக்கு முன்பே பாமக என்னை முதல் வர் வேட்பாளராக அறிவித்தது. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து 8 மண்டல மாநாடு கள், பொதுக்கூட்டங்கள், உங்கள் ஊர் உங்கள் அன்புமணி போன்ற பல மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி உள்ளோம். மக்கள் மாற் றத்தை விரும்புகின்றனர். அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே வேண்டாம், பாமகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.

பாமக தேர்தல் அறிக்கையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் திருடி இருக்கின்றன. தமிழகம் குடிகார நாடாகவும், பிச்சைக்கார நாடாகவும் ஆகிவிட்டது. திரா விடக் கட்சிகள் மது ஒழிப்பு நாடக மாடுகின்றன. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் கடைசி யாக இருக்கிறது. அனைத்து துறைகளும் கடனில் உள்ளன. அதிமுக, திமுக பொதுக்கூட்டத் துக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார்கள்.

சில ஊடகங்கள் அவர்களுக்கு சாதமாக கருத்துக் கணிப்பு வெளியிடுகின்றன. ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண் டும். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மெத்தனமாக செயல் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x