திமுகவின் ‘பி டீம்' சசிகலா: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திமுகவின் ‘பி டீம்' சசிகலா: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: திமுகவின் பி டீமாக சசிகலா செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக கொடியையும், பொதுச் செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்த தடை கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளோம். நீதிமன்றம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

சசிகலா மீது அதிமுக சார்பில் அளத்த மனுவுடன், அதிமுக பொதுக் குழுவின் தீர்மானம், தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்த தீர்ப்பு, டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் உள்ளிட்டவற்றை அளித்துள்ளோம்.

இத்தனையும் அளித்தும், இந்த திமுக அரசு சசிகலா மீது எஃப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. திமுகவின் பி டீமாகத்தான் சசிகலா செயல்பட்டு வருகிறார்." இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in