ஒருநாள் திருப்பதி சுற்றுலாவுக்கு 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யவேண்டும்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

ஒருநாள் திருப்பதி சுற்றுலாவுக்கு 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யவேண்டும்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கும் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவிற்கு செல்லும் பக்தர்கள், பயணம் செய்யும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து திருமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்காக ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை தினசரி சென்னையிலிருந்து இயக்கி வருகிறது.

தற்போது சுற்றுலா பயணிகளின் விவரங்களை இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமலை தேவஸ்தானத்தின் பிரதான சர்வரில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை செயல்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 7 நாட்களாக மாற்றம் செய்துள்ளது.

எனவே, சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கும் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை, பயணம் செய்யும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நடைமுறை வரும் 15.06.2022 முதல் அமலுக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in