

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய் யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சி யஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்றார். நேற்று காலை நிலவரப்படி சேலம், திருச்சி விமான நிலையம், திருத்தணி, வேலூர், பெரியகுளம், கரூர் பரமத்தி ஆகிய இடங் களில் நேற்று அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மாலை நிலவரப்படி, பாளையங்கோட்டை, மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சி யஸைத் தாண்டி வெப்பம் பதிவானது.