Published : 17 May 2016 09:06 AM
Last Updated : 17 May 2016 09:06 AM

வாக்களித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சலுகை

இளைய தலைமுறை வாக்கா ளர்கள் வாக்களிப்பதை ஊக்கு விக்கும் வகையில் சில தனியார் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்தன.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணை யம் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டது. சில தனியார் தொண்டு நிறுவனங்களும் இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின. ஒரு சில நிறுவனங்கள் தேர்தலில் வாக்களிப்பவர்களுக்காக சிறப்பு சலுகைகளையும் வழங்கின.

செல்பி

வாக்களித்தததற்கு அடை யாளமாக ஆள்காட்டி விரலில் இடப்படும் மையுடன் செல்பி எடுத்து, அதை தங்கள் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டால் சினிமா டிக் கெட்டை வெல்லலாம் என்று சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்று அறிவித்திருந்தது. இந்த முயற்சி இளம் வாக் காளர்களிடையே பெரும் வர வேற்பை பெற்றது. நூற்றுக் கணக்கானவர்கள் அந்த பேஸ் புக் பக்கத்தில் தங்கள் புகைப் படங்களை பதிவேற்றினர்.

கால் டாக்ஸி

கால் டாக்ஸி சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம், தங்கள் சேவையைப் பயன் படுத்தி வாக்களிக்கச் செல்பவர் களுக்கு ரூ.75 மதிப்பிலான இலவச பயண சலுகையை அளித்தது. இதுதவிர வாக்கா ளர்களுக்கான பல்வேறு போட்டிகளையும் அந்த நிறுவனம் நடத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x