

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே காரையூர் சோளம்பட்டி விலக்கில் நடந்த முதல்வர் பங்கேற்ற விழாவில் தோட்டக்கலைத்துறையினர் காய், கனி மூலம் உருவாக்கியிருந்த மருது சகோதரர்கள், வேலு நாச்சி யார் உருவங்கள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தன.
சிங்கம்புணரி அருகே காரையூர் சோளம்பட்டி விலக்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்காக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக தோட்டக்கலை சார்பில் பழம், காய்கறிகள் மூலம் வரவேற்பு தோரண வாயில்கள், மஞ்சள் பை, வாத்து போன்றவை உருவாக்கப்பட்டிருந்தன.
இதில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் உருவங்கள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தன. இவற்றை முலாம் பழம், முள்ளங்கி, பூசணி, குடை மிளகாய், வாழைத்தண்டு, தர்பூசணி, கத்தரி, முட்டைகோஸ் போன்ற வற்றை பயன்படுத்தி உருவாக்கி இருந்தனர். அவற்றின் முன்பு பொதுமக்கள் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.