

புதுச்சேரி மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். நாங்கள் ஒற்றுமையாக இருந்து இதை செயல்படுத்துவோம் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் இன்று காலை வழங்கினர்.
அதையடுத்து மாநில தலைவர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வில் எந்த பிரச்னையும் இல்லை. நான் முதல்வர் நாராயணசாமி தலைமையின் கீழ் இணைந்து செயல்படுவேன்.
எங்கள் முக்கிய நோக்கமே புதுச்சேரி மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே ஆகும். நாங்கள் ஒற்றுமையாக இருந்து இதை செயல்படுத்துவோம்" என்றார்.