கரூர் | தாயை ஏற்றாமல் சிறுமியுடன் அரசுப் பேருந்தை கிளப்பிச் சென்ற ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே தாயை ஏற்றாமல் சிறுமியுடன் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூரிலிருந்து ஆலமரத்துப்பட்டிக்கு அரசு நகரப்பேருந்து நேற்று முன்தினம் (ஜூன் 6ம் தேதி) சென்றுள்ளது. கோடங்கிபட்டியில் பேருந்து நின்றபோது ரேஷன் பொருட்கள் மற்றும் சிறுமியுடன் பெண் ஒருவர் ஏற முற்பட்டுள்ளார். சிறுமி ஏறியதுமே ஓட்டுநர் பேருந்து எடுத்ததால் பேருந்தில் ஏறிய சிறுமிய அம்மா, அம்மா எனக் கதறியுள்ளார், சிறுமியின் தாயும் குழந்தை, குழந்தை என்று கத்திக்கொண்டே பேருந்தின் பின்னால் துரத்திச் சென்றுள்ளார். தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் 2 சக்கர வாகனஙகளில் பேருந்தை துரத்திச் சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்குவதில் இருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெண்களை மிக இழிவாக நடத்துவதாகவும் ஆகையால் தங்களுக்கு இலவச பயணமே வேண்டாம் எனவும் பெண்கள் தெரிவித்தனர். மேலும் ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இதையடுத்து அரசு நகரப்பேருந்தின் ஓட்டுநர் பன்னீர்செல்வம் மற்றும் நடத்துநர் மகேந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், காரைக்குடி மண்டலத்திற்கு நேற்று பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in