

சென்னை பெருநகர காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன். நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பெருநகர காவல் ஆணையராக இருந்து டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டார். அசுதோஷ் சுக்லா, காவல் ஆணையராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து டி.கே. ராஜேந்திரன் மீண்டும் சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமித்து தமிழக உள்துறை ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.