Published : 14 May 2016 08:47 AM
Last Updated : 14 May 2016 08:47 AM

தனியாரிடம் சூரிய மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர் குற்றச்சாட்டு

தனியார் மின் உற்பத்தியாளர் களிடம் இருந்து 3,330 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதால், மின்வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செ.நாகல்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

செ.நாகல்சாமி கூறியதாவது: மின்சார சட்டம் 2003, விதி 86ன் படி மின்சார விநியோகத்தில் சூரியசக்தி மின்சாரத்தின் அளவு 0.05 சதவீதம் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014-15ம் ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது.

இந்த இலக்கை எட்ட 20 மெகாவாட் சூரிய மின்நிலையங்கள் அமைத் தாலே போதும். ‘சூரிய மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.7.01 என விலை நிர்ணயம் செய்த உத்தரவு 20 மெகாவாட்டுக்கு மட்டுமே பொருந்தும். இது ஓராண்டு மட்டுமே செல்லுபடியாகும்’ என்று கூறியே அந்த உத்தரவுக்கு ஒப்புதல் தந்தேன். 20 மெகாவாட்டுக்கு மேல் ஒப்பந்தம் செய்வதற்கும், காலத்தை நீட்டிப்புக்கும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆனால், மின்துறை அமைச் சர் கடந்த மார்ச் 31-ம் தேதி 947 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சார நிலையங்கள் உற்பத்தியை தொடங்கியதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் அதானி குழுமத்துடன் தமிழக மின்வாரியம் செய்துகொண்ட 648 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்நிலையங்களும் இதில் அடங்கும்.

விதியை மீறி ஒப்பந்தம்

2014 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிட்ட சூரிய மின்கட்டண ஆணைப்படி ரூ.7.01 என்பது 0.05 சதவீதத்துக்கான கட்டாய சூரிய மின்சாரம் வாங்குதலுக்கே பொருந்தும். இதற்குக் காரணம் சூரிய மின்நிலைய முதலீட்டு செலவு கடந்த ஆண்டு 14 சதவீதம் குறைந்தது. அதேபோல, இன்னும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், முதலில் வருபவர்க ளுக்கு கொடுத்துவிட்டுதான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண் டும் என தெளிவாக கூறப்பட்டுள் ளது. இந்த விதிக்குப் புறம்பாக, பின்னால் வந்த அதானி குழுமத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

மேற்கண்ட ஓராண்டு காலக்கெடு 2015 செப்டம்பர் 11-ம் தேதியோடு முடிவடைந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே 2015 ஏப்ரல் 1-ம் தேதியே ஆணையத்தின் மற்ற உறுப்பினரும், தலைவரும் இதன் காலத்தை இன்னும் ஓராண்டுக்கு நீட்டித்து 2016 மார்ச் 31-ம் தேதி வரை செல்லும் என்று, எனது எதிர்ப்பை புறக்கணித்து ஆணை வெளியிட்டனர்.

மேலும், தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து 3,330 மெகாவாட் சூரிய மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் 2013-ல் 15 ஆண்டுகாலத்துக்கு ஒப்பந்தம் போட்டது. மின்சார சட்டம் 2003, விதி 63-ன்படி, மின்வாரியம் மின் கொள்முதல் செய்ய விரும்பினால் மத்திய அரசின் வழிகாட்டுதல் விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோர வேண்டும். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக, மின்சாரம் கொள்முதல் செய்ய 11 உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதால் மின்வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

இவ்வாறு நாகல்சாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x