புதுச்சேரியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் தலா 6 தொகுதிகளில் வெற்றி

புதுச்சேரியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் தலா 6 தொகுதிகளில் வெற்றி
Updated on
1 min read

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் தலா 6 தொகுதிகளில் வென்றுள்ளன. சபாநாயகர் சபாபதி தோல்வியடைந்தார். முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார். மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை வென்றார்.

மக்கள் நலக்கூட்டணி ஆதரவு வேட்பாளர் மற்றும் அதிமுக தலா 1ல் வெற்றி

புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 14 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதியில் 15463 வாக்குகள் பெற்று வென்றார்.காங்கிரஸ் வேட்பாளர் 12059 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 3404.

இதுவரை முடிவு வெளியான 14 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் இந்திராநகர், கதிர்காமம், காரைக்கால் வடக்கு, மங்களம், மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு ஆகிய 6 தொகுதிகளில் வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியானது காமராஜ்நகர், லாஸ்பேட், நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம், அரியாங்குப்பம் ஆகிய 6 தொகுதிகளில் வென்றுள்ளது.

மாஹேயில் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் ராமச்சந்திரன் 10797 வாக்குகள் பெற்று வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் வல்சராஜ் 8658 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 2139

உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் 9411 வாக்குகள் பெற்று வென்றார். திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி 8503 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 908.

நெடுங்காடு தொகுதியில் அமைச்சர் சந்திராசுவுக்கு பதிலாக என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட்ட அவரது மகள் சந்திரபிரியங்கா வென்றார்

சபாநாயகர் தோல்வி: அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் சபாபதி தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயமூர்த்தி 8693 வாக்குகள் பெற்று வென்றார். சபாபதி 5212 வாக்குகள் பெற்றார். வித்தியாசம் 3481.

இழுபறி: புதுச்சேயில் உள்ள 30 தொகுதிகளில் இதுவரை 14 தொகுதிகளில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் தலா 6 தொகுதிகள் வென்றுள்ளன. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை. அதனால் இழுபறி நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in