Published : 15 May 2016 09:07 AM
Last Updated : 15 May 2016 09:07 AM

திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இருக்காது: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை கொளத்தூரில் நேற்று நடந்த திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளரும், இத்தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அதிமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு 50 ஆண்டுகாலம் பின்நோக்கிப் போயிருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கையில் 501 வாக்குறுதிகளை அளித்துள் ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் போடும் கையெழுத்து மதுவிலக்கு சட்டத்துக்கான கையெழுத்தாகத்தான் இருக்கும் என்று கருணாநிதி அறிவித்துள் ளார். விவசாய கடன்கள் தள்ளு படி, பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும், ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்.

நமக்கு நாமே பயணத்தின் போதுகூட நான் பலஇடங்களில் குறிப்பிட்டு சொன்னேன். இப் போதும் சொல்கிறேன். காவல் துறையில் எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலை யிலும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது லட்சியமாக நாங்கள் உறுதி எடுத்திருக்கிறோம். கட்டப்பஞ்சாயத்து போன்ற கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இனிமேல் இருக் காது. அப்படி இருந்தால் அதைத் தடுத்து நிறுத்துகிற முதல் ஆளாக நான் இருப்பேன்.

முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் அவர்களைத் தேடி மக்கள் வரக்கூடாது. மக்களைத் தேடித்தான் நாம் செல்ல வேண்டும். அதுதான் எனது கொள்கை. இனிமேல் திமுக எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் மக்கள் எப்போது நினைக்கிறார்களோ அப்போது அவர்களிடம் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் மக்கள் நினைப்பதற்கு முன்பு நாம் அங்கே இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து தண்டனை கொடுப்பீர்கள். அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண் டும். ஆனால், இனிமேல் நீங்கள் அப்படி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த எம்எல்ஏ தொகுதியில் சரியாக பணி யாற்றவில்லையோ அவர்கள் மீது தலைமைக் கழகமே நடவ டிக்கை எடுக்கும் என்று உறுதி யளிக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x