Published : 07 Jun 2022 06:59 AM
Last Updated : 07 Jun 2022 06:59 AM
சென்னை: பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பதிவேற்றும் 2 நிமிட சிறந்த வீடியோக்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக ஊடகப் பிரிவு தலைவர் ரங்கநாயகலு வெளியிட்ட அறிக்கை: ‘8 ஆண்டுகால மோடி ஆட்சி - சொல்லப்படாத கதைகள்’ என்றதலைப்பில் ஜூன் 5 முதல் 15 வரைதேசிய அளவில் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான போஸ்டரை கமலாலயத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புவோர் பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி 2 நிமிட வீடியோபதிவு செய்து, www.worldstorytellingchampionship.com என்றஇணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சிறந்த வீடியோவுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8939951230, 9101684685 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT