புதுச்சேரியில் அமைதியாக நடந்த தேர்தல்: மழையிலும் ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

புதுச்சேரியில் அமைதியாக நடந்த தேர்தல்: மழையிலும் ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்
Updated on
1 min read

புதுச்சேரியில் நேற்று காலை தொடர்ச்சியாக 2 மணி நேரம் பெய்த மழைக்கு நடுவிலும் வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். சிறுசிறு சம்பவங் களைத் தவிர்த்து மொத்தத்தில் புதுச்சேரியில் தேர்தல் மிக அமைதியாக நடந்தது.

புதுச்சேரியில் காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு 9.30 மணிக்கு பிறகு பரவலாக பெய்த மழை யால் மந்தமானது.

திருபுவனையிலுள்ள செல் லிப்பட்டு வாக்குச்சாவடி யில் என்.ஆர்.காங்கிரஸ் - காங் கிரஸ் இடையே மோதல் ஏற் பட்டது. புதுச்சேரி மூலக்குளத் தில் வசந்தராஜா திரை யரங்கம் தேர்தலையொட்டி நேற்றும் இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வாக்குச்சாவடி யாக மாற்றப்பட்டது.

என்.ஆர். காங்கிரஸ் தலை வரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி இந்திரா நகர் தொகு தியில் போட்டியிடுகிறார். திலாசு பேட்டை அரசு பள்ளி வாக்குச் சாவடியில் முதல்வர் ரங்கசாமி நேற்று வாக்களித்தார். இதற் காக, பகல் 12.10 மணிக்கு தனது வீட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் வாக்குச் சாவடி மையத்துக்கு வந்த ரங்க சாமி, வாக்குச்சாவடி மையத்தி னுள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு மக்களுக்கான அனைத்து திட் டங்களையும் நிறைவேற்றி உள்ளது. இதனால் மக்கள் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிப்பார்கள்” என்றார். முன்னதாக ரங்கசாமி, நேற்று முன்தினம் இரவு,் நேற்று காலை சிறப்பு பூஜைகளை நடத் தினார்.

புதுச்சேரியில் நடந்த வாக் குப்பதிவு தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறும்போது, ''ஒரு சில இடங்களில் சிறு, சிறு பிரச்சினைகள் மட்டுமே ஏற்பட்டன. காலாப்பட்டு தொகுதி யில் ஒரு வாக்குச்சாவடி அதி காரியை தேர்தல்துறை விலக்கிக் கொண்டது. மொத்தத்தில் பெரிய அளவுக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது இந்த தேர்தல்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in