Published : 07 Jun 2022 06:28 AM
Last Updated : 07 Jun 2022 06:28 AM
சென்னை: அரக்கோணம் யார்டில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித் தடத்தில் 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே காலை 8:20, 9:50, 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையேயும், 9:10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையேயும் 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர்-திருத்தணி இடையேயும் இன்றும் (7-ம் தேதி), நாளையும் (8-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன.
அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10, 11:10, நண்பகல் 12, மதியம் 1:50 மணி, திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10:15, மதியம் 12:35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
எனினும், பயணிகளின் வசதிக்காக கடம்பத்தூர்-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10:25, 11:35, மதியம் 1:35, திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் இடையே காலை 11:10, மதியம் 12:35, அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.50 மணிக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT