Published : 14 May 2016 12:54 PM
Last Updated : 14 May 2016 12:54 PM

மக்கள் நலக் கூட்டணியில் தனித்து விடப்பட்ட சிறுத்தைகள்: வந்தவாசி தொண்டர்கள் வேதனை

தி.மலை மாவட்டம் வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கள் கட்சி தனித்து விடப்பட்டுள்ள தாக தொண்டர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில், 5 தொகுதிகளில் தேமுதிகவும் தலா ஓர் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடுகின்றன. மதிமுக மற்றும் தமாகாவுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. தேமுதிக மற்றும் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், வந்தவாசி தொகுதி யில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மேத்தா ரமேஷை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவள வனோ அல்லது கூட்டணி கட்சித் தலைவர்களோ பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்துவிட்டதாக தொண்டர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து வி.சி.க., தொண் டர்கள் கூறும்போது, “விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவரவர்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய் துள்ளனர். ஆரணி, போளூர் தொகுதிகளில் மட்டும் வைகோ பிரச்சாரம் செய்துள்ளார்.

திருமாவும் வரவில்லை

கூட்டணி கட்சிகளின் தலை வர்களின் எண்ணம் எப்படி வேண்டு மானாலும் இருக்கட்டும். தோழமைக்கு தோள் கொடுப்பதற் காக பிற கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்த எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வராமல் இருப்பது கவலையளிக்கிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்துக்கு வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டுவிட்டது.

உற்சாகத்தை காணமுடியவில்லை

திமுக, அதிமுக, பாமக கட்சிகளை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளதால், தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ள னர். எங்கள் கட்சியில், அப்படி யொரு உற்சாகத்தை காணமுடிய வில்லை. கூட்டணி கட்சிகளில் மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x