

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு கேரள மாநிலம் கருநாகப்பள்ளி, தமிழக பகுதிகளில் தென்காசி, மானாமதுரை மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி ஜூன் 11-ம் தேதி முதல் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) கருநாகப்பள்ளி, தென்காசி, மானாமதுரை, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று முறையே மாலை 3.03, இரவு 8.15, 11.50, அதிகாலை 2.06 மணிக்கு புறப்படும்.
மறு மார்க்கத்தில் ஜூன் 12-ம் தேதி முதல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பேராவூரணி, மானாமதுரை, தென்காசி, கருநாகப்பள்ளி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று முறையே இரவு 10.15, அதிகாலை 12.40, 3.52, காலை 9.02 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.