

அரியலூர்: மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி கிழக்கு, முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மற்றும் இருளர் இன மக்களுக்கு, அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று தமிழர் நீதிக் கட்சி நிறுவனர் சுபா.இளவரசன், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து அவர் நேற்று மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் அளித்த மனு: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி கிழக்கு, முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மற்றும் இருளர் இன மக்களுக்கு, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இதுவரை சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். இல்லையெனில், அடுத்த வாரம் குண்டவெளியில் இருளர் இன மக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.