

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகாவுடன் வாகளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அதிமுக எத்தனை முறைகேடுகளிலும் ஈடுபட்டாலும் திமுக வெற்றி பெறுவது நிச்சயம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதை மக்கள் விரும்பவில்லை" என்றார்.