

சென்னை: கடலூரில் நீரில் மூழ்கி 7 உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து நான் வேதனையடைந்தேன். இந்தத் துயர் மிகுந்த வேளையில், உறவினர்களை இழந்த குடும்பத்தினர் பற்றி எனது மனம் சிந்திக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.