

சென்னை: தமிழகத்தில் 34 இடங்களில் காற்றின் தரம் குறித்து தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தினசரி வீடியோ வடிவில் வெளியிடத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தின் காற்றின் தரம் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறது.
இதன்படி 34 இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு காற்றின் தரம் குறித்து தினசரி தகவல் பெறப்படுகிறது. இந்த அறிக்கை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்நிலையில், முதல் முறையாக காற்றின் தரம் குறித்து தகவல்களை வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பணியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது.
இதன்படி 34 நிலையங்களில் பதிவான காற்றின் தரம் குறித்து தகவல்களை கடந்த 2 நாட்களாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது.
இதில், பல்வேறு அளிவீடுகளில் காற்றின் தரம், மொத்த காற்று தரக் குறியீடு, காற்றின் தர நிலை உள்ளிட்ட தகவல்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.