கொமதேக வெற்றி: ஈஸ்வரன் நம்பிக்கை

கொமதேக வெற்றி: ஈஸ்வரன் நம்பிக்கை
Updated on
1 min read

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக, திமுக கட்சிகளால் கிருஷ்ணகிரி மாவட்டம் எவ்வித வளர்ச்சியும் பெறவில்லை. மாவட்ட எல்லையை ஒட்டி யுள்ள பெங்களூருவில் தொழிற் சாலைகள் பெருகியுள்ளதால், தமிழக இளைஞர்கள் வேலை தேடி அங்கு செல்கின்றனர். தமிழ கத்தில் ஆட்சி செய்தவர்கள் இங்கு தொழிற்சாலைகளை உருவாக்கி இருந்தால் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்றிருப்பர்.

பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இவர்கள் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற் றாமல், வெற்றி பெற்றால் நிறை வேற்றுவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

எங்கள் கட்சி கொங்கு மண்டலத் தில் 25 இடங்களில் வெற்றிபெறும். இதனால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in