Published : 06 Jun 2022 07:28 AM
Last Updated : 06 Jun 2022 07:28 AM
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர தேர்வர்களுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் ‘திருமா பயிலகம்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளை கட்டணமின்றி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த பயிலகத்தின் மூலம் ஏற்கெனவே பயிற்சி பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தமிழகம் முழுவதும் திருமா பயிலகத்தின் சார்பாக திறன் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும் தேர்வுத் தொடரும் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர் 9884 421041, 86103 92275 உள்ளிட்ட எண்களில் தொடர்புகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT