கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அண்ணாமலை ஆறுதல்

அடைமிதிப்பான்குளம்  கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உருவப்படங்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உருவப்படங்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பண்ணை செட்டிகுளத்தில் நேற்று இரவு பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இளையார் குளத்துக்குச் சென்றார். அங்கு, சமீபத்தில் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத் தின ருக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, லெப்பை குடியிருப்பில் காரில் மூச்சுத்திணறி 3 குழந்தைகள் இறந்த வீட்டுக்கு சென்று, அவர் களது குடும்பத்தினரு க்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் பண்ணை செட்டிகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ,, நாராய ணன் திருப்பதி, சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் வினோஜ் செல்வம், மாவட்டத் தலைவர் தயாசங்கர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in