

வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை நாளை நடக்கிறது. சென் னையில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதி களில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியில் எண்ணப்படுகின்றன. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், திருவிக நகர், ராயபுரம், துறை முகம், சேப்பாக்கம், திருவல்லிக் கேணி தொகுதிகளில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரி யில் எண்ணப்படுகின்றன. விருகம் பாக்கம், சைதாப்பேட்டை, தியாக ராய நகர், மயிலாப்பூர், வேளச் சேரி தொகுதிகளில் பதிவான வாக்கு கள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் எண்ணப்படுகின்றன. ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் தொகுதிகளில் பதிவான வாக்கு கள் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி யிலும், தாம்பரம் தொகுதியில் பதி வான வாக்குகள் ஜெய்கோபால் கரோடியா பள்ளியிலும், சோழிங்க நல்லூர் தொகுதியில் பதிவான வாக்குகள் முகமது சதக் கல்லூரி யிலும் எண்ணப்படுகின்றன.
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 20 தொகுதி களில் பதிவான வாக்குப்பதிவு இயந் திரங்கள், பலத்த போலீஸ் பாது காப்புடன் நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டன. வாக்கு எண் ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்டிராங் ரூமில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறை பூட்டப்பட்டு சீல் வைக் கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவப் படை வீரர் களும், 2-வது அடுக்கில் தமிழக போலீஸாரும், 3-வது அடுக்கில் லோக்கல் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ் வொரு வாக்கு எண்ணும் மையத் திலும் சுமார் 500 போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள் ளது. ஓட்டு எண்ணும் இடத்தில் ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனி கண்காணிப்பு கேமராக்கள் வைக் கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களை இணைத்து தனியாக கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இடங்களில் நடக்கும் சம்பவங்களை தேர்தல் அதிகாரிகள் தங்களது அறையில் இருந்தே கண்காணிக்க முடியும்.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கு கின்றன. சுமார் 1,800 பணியாளர் கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணும் இடத்துக்கு வெளியாட்கள் செல்ல வும், செல்போன் கொண்டு செல்ல வும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தனியாக தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. அங்குதான் கட்சி தொண்டர்கள் நிற்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்துக் குள் செல்லும் நிருபர்கள், பூத் ஏஜெண்டுகள் ஆகியோர் அமர்வ தற்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காவல் ஆணையர்கள் சங்கர், சேஷசாயி மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று காலையில் வாக்கு எண் ணும் மையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.