இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்குக: ராமதாஸ்

பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்.
பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ''இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை மட்டுமே
வழங்கப்படுகிறது. வேறு வேலை செய்யாத பலருக்கு அது தான் வாழ்வாதாரம். அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம்
செய்வது நியாயமல்ல.

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் செய்வது சேவை ஆகும். அவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை
வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in