

தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தின் 14-வது சட்டப் பே ரவையின் பதவிக்காலம் மே 22-ம் தேதியுடன் (நேற்று) முடிந்தது. புதிய சட்டப்பேரவையை அமைப் பதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 16-ம் தேதி நடந்தது. 232 தொகுதிகளில் நடந்த தேர்தலில், அதிமுக 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது.
அதிக இடங்களை பிடித்த அதிமுக, தமிழகத்தில் 32 ஆண்டு களுக்குப் பின் 2 வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. இதை யடுத்து, அதிமுக புதிய எம்எல்ஏக் கள் கூட்டம் கடந்த வெள்ளிக் கிழமை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஆளுநர் ரோசய் யாவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது, 133 எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதம், அமைச்சர்கள் பட்டியலை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் தொடர்பான பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.
இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளி க்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, திண்டுக்கல் சி .சீனிவாசன், டாக்டர் வி.சரோஜா, கே.சி.கருப்பணன், ஓ.எஸ். மணி யன் உள்ளிட்ட 13 புதுமுகங் களும் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அமைச் சரவையில் 3 பெண்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெஞ்சமினுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா அரங்கில் இன்று நடக்கும் பிரம்மாண்ட விழாவில், பகல் 12 மணிக்கு மேல் முதல்வராக ஜெயலலிதா மற்றும் 28 அமைச் சர்கள் பதவியேற்கின்றனர். முதல் வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமா ணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒத்திகை நேற்று பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்தது.
முதல்வர் ஜெயலலிதா பத வியேற்பு விழாவுக்கு, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச் சர்கள், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தோழமை கட்சி களைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தோழமை கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
பொறுப்பேற்பு
முதல்வராக பகல் 12 மணிக்கு மேல் பதவியேற்கும் ஜெயலலிதா, அமைச்சர்கள் பதவியேற்பு முடிந்ததும், பகல் 1 மணி அளவில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். தன் அறைக்கு செல்லும் அவர், முதல் வராக பொறுப்பேற்று கோப்புகளில் கையெழுத்திடுகிறார். தொடர்ந்து மதுவிலக்கு, மின்சாரம் தொடர்பான கோப்புகளில் கையெ ழுத்திடுவார் என்றும், அதற்கான கோப்புகள் தயாராக இருப்பதா கவும் தலைமைச் செயலக அதி காரிகள் தெரிவித்தனர்.
பொறுப்பேற்க தலைமைச் செய லகத்துக்கு வரும் முதல்வரை, தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஷீலா பிரியா, ராம்மோகன் ராவ், ராமலிங்கம் உள்ளிட்ட முதல்வரின் செயலா ளர்கள், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக் குமார் உள்ளிட்டோர் வரவேற் கின்றனர்.
வரவேற்பு ஏற்பாடு
முதல்வர் ஜெயலலிதா பதவி யேற்பு விழாவை தமிழகம் முழுவ தும் உள்ள பொதுமக்கள் பார்க்கும் வகையில், தமிழக செய்தித்துறை யின் பிரச்சார வாகனங்கள் மாவட் டங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் நிறுத்தப்பட்டு, அதில் உள்ள டிஜிட்டல் திரையில் திரையிடப்படுகிறது. மேலும், பத வியேற்பு விழா நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள வாலாஜா சாலை, காமராஜர் சாலை யில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப் பட்டுள்ளன. இது தவிர, முதல்வர் வரும் பகுதிகளில், கட்சியினர் திரண்டு வரவேற்கக்கூடும் என்பதால், சாலை ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.