

தமிழக பாஜக தலைவர் அண்ணா மலையின் பிறந்தநாளை முன்|னிட்டு, பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள தர்காவில் பிரார்த்தனை செய்தபின்னர் பாஜக சிறுபான்மையின பிரிவு தேசியச்செயலர் வேலூர் இப்ராஹீம் கூறியதாவது:
பாஜக மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலை வந்த பிறகு, திமுகவும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளும் பதற்றத்தில் உள்ளன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், மக்கள் ஆட்சி, சமத்துவம், சமூக நீதி, சிறுபான்மையின மக்களுக்கான உண்மையான பாதுகாப்பு என இவை அனைத்தையும் கொண்டு வருவதற்கான அண்ணாமலையின் முயற்சி அளப்பரியது.
இம்முயற்சி, தமிழகத்தில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரும். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அவர் அரவணைத்துச்செல்வது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது, என்றார்.