

பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் ஜெயங்கொண்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் அன்புமணி அலை வேகமாக வீச தொடங்கியுள்ளது. அந்த அரசியல் வீச்சில் அதிமுக, திமுக காணாமல் போய்விடும். நடுநிலையாளர் வாக்குகள் பாமகவுக்கே. இன்றைய நிலவ ரப்படி பாமக 206 தொகுதிகளில் வெற்றி பெறும்.
காவிரி உடன்படிக்கையை புதுப்பிக்காமல் விட்டது, கச்சத்தீவை தாரை வார்த்தது என கருணாநிதி தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகங்கள் செய்துள்ளார். ஜெயலலிதாவும் கச்சத்தீவு மீட்கப்படும் என்று பேசி மட்டுமே வருகிறார்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங் கப்படவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு அக்க றையில்லை. இதனால் அரியலூர் மாவட்ட மக்களின் வளர்ச்சி பாதிக் கப்பட்டுள்ளது.
பொன்னேரி தூர்வாரப்படாததால் அதன் பரப்பு சுருங்கிக்கொண்டே வருகிறது. அரியலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் மிகவும் பின்னடைந்துள்ளது. பாமக ஆட்சியில் மட்டுமே தரமான இலவச கல்வி கிடைக்கும் என்றார்.