Published : 12 May 2016 09:26 AM
Last Updated : 12 May 2016 09:26 AM

இதுவரை ரூ.98 கோடி பறிமுதல்: பறக்கும் படைகள் அதிகரிப்பு - லக்கானி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னையில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஏற்கெ னவே 5 ஆயிரத்து 644 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் எண்ணிக்கை 6 ஆயி ரத்து 112 ஆக உயர்த்தப்பட்ட து. இந்நிலையி்ல் கடைசி நேர பணப் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கூடுதலாக 2 ஆயிரம் பறக்கும்படைகள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. இக்குழுக் கள் இப்போது முதல் தொடர்ந்து பணியில் ஈடுபடும். இந்த பணிக்காக தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பணப்பதுக்கல் தொடர்பாக வரும் தகவல்கள் அடிப்படையில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10-ம் தேதி கரூர் மற்றும் சென்னையில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. அதே போல், விழுப்பு ரத்தில் முரளிதர ரெட்டி வீடு, எஸ்.எஸ்.ஜூவல்லரி, பிபிபி ரைஸ்மில் ஆகியவற்றில் நடந்த சோதனையில் ரூ.2 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.98 கோடியை எட்டியுள்ளது. தொடர்ந்து சோதனை நடப்பதாலும், இன்னும் சில தினங்கள் இருப்பதாலும் பறிமுதல் தொகை ரூ.100 கோடியை எட்டும்.

இந்திய தேர்தல் வரலாற்றில் இவ்வளவு தொகை பிடிபடுவது இந்த தேர்தலில்தான். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ரூ. 35 கோடியே 53 லட்சமும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.25 கோடியே 05 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது பணப்பதுக்கலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள் பணப்பட்டு வாடா தொடர்பான புகார்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக ளுக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x