

மேடைக்கு மேடை பொய் பிரச் சாரம் செய்து வரும் ஜெயலலிதா தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா ? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பத்தூரில் அவர் பேசும்போது, “ முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் மீதும், தமிழகத்தின் மீதும் எந்த அக்கறையும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் வேலூர் மாவட்டம் பக்கம் வராத ஜெயலலிதா, வாக்கு கேட்க நேற்று முன்தினம் அரக்கோணம் வந்தார். ஊர், ஊராக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதிமுக தேர்தல் அறிக் கையில் இடம்பெற்றுள்ள இலவ சங்களை குறிப்பிட்டு பேசும் ஜெய லலிதா, எந்த ஒரு திட்டத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவு செய் கிறேன் எனக்கூறி வருகிறார். அப்படியென்றால், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் முன் வைக்கப்பட்ட பல திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றித் தரவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதிகள் கீழ் அறிவித்த திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக திட்டங்கள் பற்றி ஒரே மேடையில் என்னுடன் ஜெய லலிதா விவாதிக்கத் தயாரா? வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 75 சத வீதம் பணிகள் முடிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக 25 சதவீதம் வேலையை முடிக்காமலேயே திட்டத்தை செயல்படுத்தி விட்டனர். கிராமங் களில் இன்னும் இந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை. ஆனால் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என சுய தம்பட்டம் அடித்து வருகிறார்” என்றார்