

விவசாயிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிடம் பெற்ற கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண் டும் என்று தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயி கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த கோரிக்கை கடி தத்தை அரசிடம் அளித்துள்ள பி.ஆர்.பாண்டியன் மேலும் கூறிய தாவது: விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியா மல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. கடன் தொல்லையால் பல விவ சாயிகள் தற்கொலை செய்துள் ளதை காவல்துறையினரே அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, எங்கள் கோரிக்கையை ஏற்று, சிறு குறு விவசாயிகளின் கடனை தள்ளு படி செய்துள்ளார். பெரிய விவசாயி களின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்துள்ளது வேதனைக்குரியது. இந்த தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
எனவே, தற்கொலையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கூட்டுறவு வங்கிகளில் இருந்து அனைத்து விவசாயிகளும் பெற் றுள்ள கடன்களையும் தள்ளு படி செய்ய வேண்டும். 2013-14ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட கூட்டு றவுக்கடன் வட்டியில்லாததாகும்.
ஆனால், அதற்கு தற்போது 13 சதவீதம் வட்டி, அபராத வட்டி என 17 சதவீதத்தை போட்டுள் ளனர். முதல்வரின் அறிவிப்புக்கு அதிகாரிகள் களங்கம் கற்பித்துள் ளனர். இது வன்மையாக கண்டிக் கத்தக்கது. முதல்வரின் கவனத் துக்கு அசல் கடன் விவரங்களை கொண்டு செல்லாமல், ரூ.9 ஆயி ரம் கோடி கடன் இருப்பதாகவும், அதில் ரூ.5 ஆயிரத்து 280 கோடி மட்டும் சிறு, குறு விவசாயி களின் கடன் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக முதல்வர் விரிவான விசாரணை நடத்தி, விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும் கடன் பெற்றுள்ளனர். இவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறோம்.
முதல்வர் கவனத்துக்கு சென்றால் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.