Last Updated : 07 May, 2016 02:59 PM

 

Published : 07 May 2016 02:59 PM
Last Updated : 07 May 2016 02:59 PM

அதிமுக, திமுக இடையே ராதாபுரத்தில் இருமுனைப் போட்டி

ராதாபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேமுதிகவும், பாஜகவும் கணிசமான வாக்குகளைப்பெறும் என்ற நிலையில், வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார் என்ற கேள்வி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

ராதாபுரம் தொகுதிக்குள் தாலுகா பகுதி, 10 கடலோர மீனவ கிராமங்கள் ஆகியவை வருகின்றன. கடலோர கிராமங்களில் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி இத் தொகுதியில் மொத்தம் 2,39,943 வாக்காளர்கள் உள்ளனர்.

1957 முதல் 2011 வரை நடைபெற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 2 முறை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறை, அதிமுக, தமாகா, தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கடந்த 2006-ல் இத் தொகுதியில் திமுக வேட்பாளர் எம். அப்பாவு வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ். மைக்கேல்ராயப்பன் வெற்றி பெற்றிருந்தார்.

15 பேர் போட்டி

தற்போது முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் திமுக வேட்பாளர் மு. அப்பாவு, அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகிய இருவருக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. அவர்களுடன் இத் தொகுதியில் பச்சை தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பி. உதய குமார், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் எஸ். சிவனணைந்தபெருமாள், பாஜக வேட்பாளர் எஸ். கனிஅமுதா ஆகி யோரும் முக்கிய வேட்பாளர்கள்.

செல்வாக்கு கைகொடுக்கும்

திமுக வேட்பாளர் அப்பாவு இத் தொகுதியில் சுயேச்சையாகவும், கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனுபவம் உள் ளவர். தொகுதியிலுள்ள 8 ஊராட்சிகளுக்கு ஒரு திமுக நிர்வாகி என்ற அடிப்படையி ல் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. அப்பாவுவை ஆதரித்து வள்ளியூரில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரண்டது திமுகவினரை உற்சாகப் படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் அதிமுகவி னரின் களப்பணிக்கு இணையாக திமுகவினர் தேர்தல் பணியாற்ற வில்லை என்றும் கூறப்படுகிறது. அப்பாவு வேட்பாளரானதால் அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகள் சிலர் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றவில்லை என்று அக்கட்சி தொண்டர்களே குறைபட்டுக் கொள்கிறார்கள். அதேபோன்று, தங்களுக்கு இத்தொகுதியை ஒதுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸும் இருப் பதாகக் கூறப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி தொகுதியில் அப்பாவுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு காரண மாக, அவர் வெற்றி பெறுவார் என திமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சுறுசுறுப்பான அதிமுக

அதிமுக தரப்பில் திமுகவை விஞ்சும் வகையிலான களப்பணி தொகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 2 ஊராட்சிகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் களப்பணியில் இறக்கிவிடப்பட்டி ருக்கிறார்கள். வீடுவீடாகச் சென்று துண்டுபிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரச்சா ரத்தை அதிமுகவினர் தீவிரப் படுத்தியிருக்கிறார்கள். தங்களு க்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை பெறவேண்டும் என்ற இலக்குடன் நிர்வாகிகள் செயல்படுகிறார்கள்.

அதே சமயம், வேட்பாளராகும் வாய்ப்பை இழந்த சில நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளனர். எனினும், அதை வெளிக்காட்டாமல் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

வாக்குகள் பிரியும்

திமுக, அதிமுகவுக்கு இடையே காணப்படும் போட்டிக்கு நடுவே தேமுதிக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் கணி சமான வாக்குகளைப் பெறும் வாய்ப்புள்ளது.

இத் தொகுதியில் மீனவ கிராமங்களில் உள்ள வாக்குகளை தேமுதிக வேட்பா ளரும், சுயேச்சை வேட்பாளர் உதயகுமாரும் பிரிக்கும் நிலையுள்ளது. அதேபோல், குமரி மாவட்டத்தையொட்டி உள்ள ராதாபுரம் பகுதிகளில் பாஜக வுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x