Published : 11 May 2016 09:32 AM
Last Updated : 11 May 2016 09:32 AM

ஊழல் முறைகேடுகளில் திமுக, அதிமுகவுக்கு சமபங்கு: முத்தரசன் புகார்

விழுப்புரத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் நேற்று நிரு பர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம், பணம் கொடுப்பதை சரிவர தடுக்கவில்லை.

வாக்குக்கு பணம் விநியோகித் தால் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் ஒட்டன்சத்திரத்தில், திமுக வேட்பாளர் சக்கரபாணி தலைமையில் 15 பேர் பணம் கொடுத்தபோது சிக்கி னர். சென்னை உள்ளிட்ட இடங்க ளில் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. எதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நடு நிலையான தேர்தல் ஆணையம் வேண்டும்.

இயற்கை வளங்களை கொள் ளையடித்தது முதல் பல ஊழல்களுக்கு திமுக, அதிமுக வுக்கு சமபங்கு உள்ளது. விஏஓ முதல் தலைமை செயலர் வரை லஞ்சம் உள்ளது. ஊழல் தொடர்கிறது. ஒப்பந்தப்பணிக்கு, கூடுதல் கமிஷன் கேட்பதாக பொறியாளர் சங்கத்தினர் இதனை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x