சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் ஊதிய நிலுவையை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வையாவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.எல். நிறுவனத்தில்பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த வையாவூர் கிராமத்தில் பி.எஸ்.எல்.நிறுவனம் செயல்பட்டு வருகிறது.அந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொழிலாளர்களை முன் னறிவிப்பில்லாமல் பணி நீக்கம்செய்ததை கைவிட வேண்டும், செங்குன்றம் தொழிற்பேட்டையில் செயல்படும் டீஜிங் மொப்பாட்ஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் யூரோ லைஃப் ஹெல்த்கேர் நிறுவனத்தில் மாதம்தோறும் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமைதாங்கினார். சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலர் க.பகத்சிங் தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங் கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in