Published : 02 May 2016 08:40 AM
Last Updated : 02 May 2016 08:40 AM

தேர்தலில் எத்தனை பேர் போட்டி?- இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் மே 16-ம் தேதி ஒரே கட்ட மாக தேர்தல் நடக்க உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற் கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட் பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவ டைந்தது. அரசியல் கட்சி வேட் பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 7,149 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலிக்கப்பட்டன. இதில், பல் வேறு காரணங்களுக்காக 2,549 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. 4,600 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு தொகுதி தேர்தல் அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படும். இன்று மாலையே சுயேச்சை களுக்கான சின்னமும் ஒதுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x