புதிய கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியில் தாமதம் கூடாது: சிஎம்டிஏ-வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியில் தாமதம் கூடாது: சிஎம்டிஏ-வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தேர்தலைக் காரணம் காட்டி புதிய கட்டுமானங்களுக்கு திட்ட அனுமதி வழங்க தாமதம் செய்யக்கூடாது என சிஎம்டிஏ-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப் பர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு (கிரெடாய்) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட ஒரு பொதுநல மனுவில், ‘‘சென்னையில் புதிதாக கட்டிடங்கள் கட்டும்போது வீ்ட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை செயலர், நகரமைப் புத்துறை ஆணையர் மற்றும் சிஎம்டிஏ ஆகியவற்றிடம் திட்ட அனு மதி கோருவது வழக்கம். ஆனால் தேர்தலை காரணம் காட்டி திட்ட அனுமதி தர சிஎம்டிஏ உள்ளிட்ட துறையினர் மறுத்து வருகின்றனர்” என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர் வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘பெரும்பாலான நீதிமன்ற அவ மதிப்பு வழக்குகளுக்கு சிஎம்டிஏ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இது கண்டிக்கத்தக்கது. இந்த வழக் கைப் பொருத்தமட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள கோப்புகளுக்கு உடனடியாக திட்ட அனுமதி வழங்க சிஎம்டிஏ துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in