Published : 17 May 2016 09:45 AM
Last Updated : 17 May 2016 09:45 AM

தேர்தல் நாளன்று பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு: அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

தமிழகத்தில் தேர்தல் நாளான நேற்று சென்னை உட்பட மாநிலத் தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அத் தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தேர்தல் நாளன்று கடைகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு சில சிறு கடைகள் தவிர ஹோட்டல்கள் முதல் மால்கள் வரை நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தன. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையில் சென்னையே பரபரப்பாக இருக் கும். வார விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு அதிக மானவர்கள் சென்னைக்கு திரும்புவதால் பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் வழக்க மான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால், நேற்று புறநகர் பகுதி மட்டுமன்றி சென்னை மாநகரும் வெறிச்சோடி காணப்பட்டது.

போலீஸ், மற்றும் ராணுவ வாகனங்கள் மட்டுமே நகரில் அதிக அளவில் தென்பட்டன. சென்னையின் பரபரப்பான வர்த் தகப் பகுதியான தியாகராய நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் தி.நகர் பகுதியே ஆள் அரவமின்றி காணப்பட்டது.

இது மட்டுமன்றி, மளிகை கடை கள், அரிசி கடைகள், மார்க்கெட் போன்றவை மூடப்பட்டிருந்தன. மேலும், வடபழனி ஃபோரம் மால், ஸ்பென்சர்ஸ் போன்றவை மூடப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், டீக்கடைகள், தள்ளு வண்டிக் கடைகள் போன்றவை மட்டுமே நேற்று இயங்கின.

பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம், தாம்பரம், பெருங் களத்தூர், வண்டலூர், ஊரப் பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத் தேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலை யோரத்தில் பெரும்பாலான கடைகளும், உணவு விடுதி களும் மூடிக்கிடந்ததால், அப்பகுதி கள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கிக் கிளைகளும் செயல்பட வில்லை. தினமும் மிகவும் பரபரப் பாக காட்சியளிக்கும் தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட், காய்கறி கடைகள் போன்றவற்றில் வியாபாரிகள், பொதுமக்கள் இல்லாததால் களையிழந்து காணப்பட்டன.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் மேன்சன்கள் அதிகமாக உள்ளன. அந்தப் பகுதியில் நேற்று ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால், இளைஞர் கள் பலர் உணவின்றி தவித்தனர். சிலர் டீக்கடைகளில் பிரெட்டும், பிஸ்கட்டும் சாப்பிட்டு காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டனர். ஓட்டல்கள் மூடப் பட்டிருந்ததால் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகள், நேற்று மதியம் உணவுக்காக பெரிதும் திண்டாடினர்.

இந்த கடையடைப்பு தொடர் பாக தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் த.வெள்ளையன் கூறும்போது, “தேர்தல் நாளன்று கடைகளை அடைப்பது தேவையற்றது. மளிகைக் கடை மாதிரியான அத்தியாவசிய பொருட்களின் கடைகள் குடும்பக் கடைகளா கவே உள்ளன. இந்த கடை களும் மூடப்பட்டுள்ளது ஏனென்று தெரியவில்லை. ஜவுளிக்கடைகள், மால்கள் போன்றவற்றில் வெளியூர் மக்கள் அதிகம் பணி யாற்றுகின்றனர். வருங்காலங் களில் அவர்களைப் பற்றிய தகவல்களை திரட்டி அவர் களுக்கு பதிலாக வேற்று ஆட்களை பணியமர்த்திவிட்டு அன்றைய தினம் கடைகளை நடத்த வேண்டும் என்று கடைகளின் உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x