“கூட்டணி தர்மத்தைப் பார்க்காமல் பாஜக மீது குற்றம் சுமத்துவதா?” - பொன்னையன் மீது வி.பி.துரைசாமி காட்டம்

பொன்னையன் | வி.பி.துரைசாமி
பொன்னையன் | வி.பி.துரைசாமி
Updated on
1 min read

சென்னை: "கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல் பாஜக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சுமத்தியிருப்பது கண்டனத்துக்குரியது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

சென்னயைில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுக 65 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, அவர்களைவிட மிகக் குறைவாக 4 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக மிக சிறப்பாக செயல்படுகிறது என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல், மூத்த தலைவர், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கின்ற ஒரு தலைவர் இதுபோன்று பாஜக மீது குற்றச்சாட்டு சுமத்தியது கண்டனத்திற்குரியது.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் இருந்து அவர் பேசியது தொடர்பாக விளக்கம் பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "பாஜக, அதிமுகவின் கூட்டணிக் கட்சிதான் என்றாலும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in