Published : 02 Jun 2022 06:41 PM
Last Updated : 02 Jun 2022 06:41 PM

மின் தடை முதல் சேவை குறைபாடு வரை - மின்துறையிடம் புகார் அளிப்பது எப்படி? - ஒரு தெளிவான கைடன்ஸ்

சென்னை: மின்சாரம் தொடர்பான பல்வேறு புகார்களை எங்கு புகார் அளிக்கலாம் என்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.

பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆகும். மின்தடையின்போது அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்தும் பிரச்சனையாக சரி செய்யப்படாமல் இருந்த அனுபவம் பலருக்கும் கிடைத்து இருக்கும்.

இந்நிலையில், மின்சாரம் தொடர்பாக தற்போது உள்ள குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பு மற்றும் மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் தொடர்பான விரிவான தகவல்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விவரம் பின்வருமாறு:

மின்தடை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்

மின் இணைப்புகள்: சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள தெருவிளக்குப் பெட்டி மற்றும் மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் கம்பிகள் தொடர்பாக நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் படம் எடுத்து கீழ்கண்ட எண்களுக்கு அனுப்பலாம்

சென்னை - 9445850829

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் - 9444371912

கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி - 9442111912

சேலம், ஈரோடு, நாமக்கல் - 9445851912

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை - 9443111912

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் - 8903331912

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் - 9486111912

வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி - 6380281341

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் - 9445855768

மற்ற புகார்கள்

மின்மாற்றி, கம்பம், தெருவிளக்குப் பெட்டி, மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான, அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்களுக்கு மின்னகம் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். இதைத் தவிர்த்து www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் Reach us à Consumer’s Complaint என்ற பக்கத்தை பார்வையிடலாம்

மேல்முறையீடு

புகார்களுக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.

குறை தீர்வு மன்றங்கள்

முறையீடு செய்தும் குறை தீர்க்கப்படவில்லை என்றால், ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் புகார்கள் சமர்ப்பிக்கலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் வலையதளம் www.tnerc.gov.in இணையதளத்தில் Consumer Corner என்ற பக்கத்தில் உள்ளது.

ஒழுங்குமுறை ஆணையம்

மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது மன்றத்தின் ஆணையினால் நுகர்வோர் திருப்தி அடையவில்லையென்றாலோ, அவராகவோ அல்லது அவருடைய சார்பாளர் மூலமாகவோ 30 நாட்களுக்குள் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு அதிகார அமைப்பான மின்சாரக் குறை தீர்ப்பாளரிடமும் மேல்முறையீடு செய்யலாம். இதன்விவரங்கள் www.tnerc.gov.in என்ற இணையதளத்தில் Regulations a Final Regulations à Consumer Grievance Redressal Forum and Electricity Ombudsman என்ற பகுதியில் உள்ளது.

மின் திருட்டு

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும் 21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன. இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள் அமலாக்கத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து 23 குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது. இந்த அமலாக்க குழுக்களுக்கு புகார்களின் தெரிவிக்க ig@tnebnet.org, ig@tnebnet.org மற்றும் ceapts@tnebnet.org, ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஊழல், லஞ்சம் தொடர்பான புகர்கள்:

இந்த வகையிலான புகார்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவிற்கும் அனுப்ப வேண்டும்.

விதிகளில் மாற்றம்

ஆணையத்தால் இயற்றப்பட்ட விதிகளில், நுகர்வோர்கள் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், அந்த மாற்றத்தையும் அதற்கான குறிப்பிட்ட கராணங்களையும் எழுத்து வடிவாக மின் வழங்கல் விதி பிரிவு 27 / மின்பகிர்மான விதி பிரிவு 51ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதித்தொகுப்பு மீள்பார்வைக் குழு (Code Review Panel) விற்கு அனுப்பலாம். அத்தகைய மாற்றமும், காரணங்களும் கொண்ட விதித்தொகுப்பு மீள் பார்வைக் குழுவின் கருத்துரு, உறுப்பினர் செயலராக உள்ள தலைப்பொறியாளர் / வணிகம் / தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் / சென்னை அவர்களுக்கு அனுப்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x