

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை செயலர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 2) ஆலோசனை நடத்தினார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். நேற்று (ஜூன் 1) முதல் நாள் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில், கூட்டுறவு, உணவு, பள்ளிக்கல்வி, உயர் கல்வி, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.