

புதுவை புதிய துணைநிலை ஆளுநராக பதவியேற்க உள்ள கிரண்பேடி டெல்லியில் இருந்து நேற்று மாலை புதுச்சேரி வந்தார். அவருக்கு தலைமைச் செயலர் மனோஜ் பரிதா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இன்று மாலை 6.30 மணிக்கு கிரண் பேடி பதவி ஏற்கிறார்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சிறப்பைப் பெற்ற கிரண்பேடி, காவல்துறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.பின்னர் நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபைக்கான அமைதி்ப்படை நடவடிக்கைளின் காவல்துறை ஆலோசகராக பணிபுரிந்தார். ஆசியாவின் உயர்ந்த விருதான 'ராமன் மகசசே விருது' பெற்ற இவர் பஞ்சாபை சேர்ந்தவர்.இன்று மாலை கிரண்பேடி பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப் பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. கிரண்பேடியின் விருப்பத்தின் பேரில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப் பப்பட்டுள்ளன. அதை அவர்கள் பெற்றுக் கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.