Published : 01 Jun 2022 06:35 AM
Last Updated : 01 Jun 2022 06:35 AM

ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி: மது, ஆன்லைன் ரம்மி பாதிப்புகள் குறித்து புகார்

பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக நீதிப் பேரவை தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் உடன் உள்ளனர்.

சென்னை: பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மது, ஆன்லைன் ரம்மி பாதிப்புகள் குறித்து ஆளுநரிடம் அன்புமணி தெரிவித்தார்.

பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக நீதிப் பேரவை தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்குப் பின் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக தலைவராக பொறுப்பேற்றதால், ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சுற்றுச்சூழல் பிரச்சினை, கல்வி, விவசாயம், காலநிலை மாற்றம், நீர் மேலாண்மை, மது பிரச்சினை, ஆன்லைன் ரம்மி,போதைப் பழக்கம் குறித்து ஆளுநரிடம் எடுத்து கூறினேன். எங்களுடைய கட்சி குறித்தும் தெரிவித்தேன். எதிர்கால காலநிலை மாற்றம் குறித்து திட்டமிட்டு, இப்போதே நிதி ஒதுக்குவது குறித்து பேசினேன்.

நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, அப்போதைய மத்திய அரசை நீட்டை அமல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்தியது குறித்தும் தெரிவித்தேன். தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வி போன்ற சில விஷயங்கள் சரியானவை. ஊடகமின்றி முன்னேற்றமில்லை.

அரசியலில் இருப்போர் ஊடகவியலாளர்கள் குறித்து நாகரிகத்தோடு பேச வேண்டும். பாமக 2.0 மூலம் கட்சி வளர்ச்சிக்காக புதிய யுக்திகளை பயன்படுத்த உள்ளோம். 3 மாதங்களாக கட்சியில் 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கட்சியில் 90 சதவீத பொறுப்புகளை இளைஞர்களுக்கே வழங்கி வருகிறோம். தமிழக வீரர்கள் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும். இறகுப்பந்து சங்க தலைவராக இதுதான் எனது ஆசை. நான் அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரர். விளையாட்டுக்கும் அரசியலுக்கு சம்பத்தம் இருக்கக் கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x