Published : 01 Jun 2022 06:04 AM
Last Updated : 01 Jun 2022 06:04 AM

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி 2016-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவருக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம்

சென்னை: கடந்த 1998 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவு பாரபட்சமானது. எனவே அதை ரத்து செய்து கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பாக நடந்தது. அப்போது நீதிபதி, 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2016 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்குவது என்பது பாரபட்சமானது.

எனவே கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் 7-வது ஊதிய ஒப்பந்தக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம், நிலுவைத்தொகை, அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x