

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல், சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 6 தாலுகாக்களில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி வரும் ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் வருவாய்த் துறை அலுவலர்களால் நடத்தப்படும்.
மதுரவாயலில் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, சோழிங்கநல்லூரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், மாதவரத்தில் வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் கே.கண்ணப்பன், அம்பத்தூரில் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் ஏ.கே.பிரவீனா குமாரி, ஆலந்தூரில் தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் கே. சாய் வர்த்தினி, திருவொற்றியூரில் மாவட்ட ஆய்வுக்குழும அலுவலர் ஏ.கவுசல்யா ஆகியோரது தலைமையில் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த ஜமாபந்தியை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.