

சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் வசிப்ப வர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பெண்களுடனான இவரது தவறான தொடர்புக்கு இடை யூறாக இருந்த மனைவியின் சகோதரர் ஜான் பிலோமினன், தான் தொடர்பு வைத்திருந்த பெண்களின் கணவர்களான உத்திரமேருரை சேர்ந்த ஸ்ரீதர், மடிப்பாக்கத்தை சேர்ந்த ஹென்றி ஆகியோருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் ஸ்டீபன், அவரது கூட்டாளிகள் கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி(32), முருகானந்தம்(27), சதீஷ்குமார்(26) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 3 பே ருக்கும் நெஞ்சுவலிக்கான அறி குறியே இருந்ததால் இயற்கை மரணமாகவே கருதப் பட்டது. தற்போது அவர்கள் கொலை செய்யப்பட்டது கூட் டாளிகள் அளித்த வாக்குமூலங் களிலிருந்து தெரியவந்ததால் வழக்குகளுக்கான ஆதாரங் களை சேக ரிக்க புதைக்கப்பட்ட 3 பேரின் உடலையும் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய் துள் ளனர். இதற்கான நீதிமன்ற அனுமதி கிடைத்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கில் புதைக்கப்பட்டிருந்த ஜான் பி லோமினன் உடல், காஞ்சிபுரம் மண்டலம் பெருநகரில் புதைக்கப் பட்டிருந்த தர் உடல் ஆகி யவற்றை நேற்று காலையில் போலீஸார் தோண்டி எடுத்து, மீண்டும் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
உடல்கள் புதைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் எலும்புகள் மட்டுமே இருந்தன. கொலை செய்ய பொட்டாசியம் சயனைடு என்ற விஷ மருந்தை பயன்படுத்தியதாக ஸ்டீபன் வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார். அந்த விஷத்தின் தன்மை எலும்பில் இருக்கிறதா என்று தடய அறிவியல் மூலம் சோதனை செய்யப்பட உள்ளது.