

பிளஸ் 2 தேர்வில் வெவ்வேறு தொழிற் பாடங்களில் நாகை மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஏ.பாரத், மின் இயந்திரங்களும், சாதனங்களும் என்ற பாடத்தில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1,088.
ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அய்யப்பன், கட்டிடப் பட வரைவாளர் (டிராப்ட்ஸ் மேன்) பாடத்தில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பள்ளி மாணவர் டி.சுதாகரன் 598 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1,080.