

திருமணம் முடிந்து கணவருடன் வெளிநாட்டில் சென்று தங் கும் பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கித் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில மகளிர் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் வியாழக்கிழமை நடந்த மகளிர் ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமுக நலத்துறைக்கு வரப்பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து, ஆய்வு செய்வதற்கான கூட்டம் மாநில மகளிர் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியன் தலை மையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மத்தியில் பேசிய மகளிர் ஆணையர், ’சமுக நலத் துறைக்கு வரப்பெற்ற பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் வரதட் சணை புகார்கள் தொடர் பான மனுக்களின் மீது, உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், மனுக் கள் அளிக்கும் பெண்களின் அந் தஸ்த்தை பார்த்து அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொள் ளாமல், அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதைக் கருத்தில்கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் பணி புரியும் ஆண்கள் பெண்களைத் திருமணம் செய்து அங்கு அழைத்துச் சென்ற பின், வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். மேலும், அந்தப் பெண்ணை மட்டும் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி அவர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். அத னால், இவ்வாறு வரும் புகார் கள் மீது போலீஸார் கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகள், பாலியல் தொல்லை உள்ளிட்டவைகள் குறித்துப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சமூக நலத்துறை மற்றும் மகளிர் ஆணை யம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் கொடுப் பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து சமுக நலத்துறையிடம் பெண்கள் கொடுத்துள்ள புகார் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் மாநில மகளிர் ஆணையர் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டச் சமூக நலத்துறை அலுவலர் சற்குணா, மகளிர் ஆணையக் கண் காணிப்பாளர் பானுமதி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், போலீஸார் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மாவட்டச் சமூகநலத்துறை அலு வலர் சற்குணாகூறும்போது, ’காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப் பாண்டில் வரதட்சணைதொடர்பாக இதுவரை 38 புகார் மனுக்கள் வந்துள் ளன. இதில் 31 மனுக்களின் மீது நடவடிக்கை மேற் கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 புகார் மனுக்கள் மீது தற்போது விசாரணை நடை பெற்று வருகின்றன. மேலும், வன் கொடுமைதொடர்பான 746 மனுக்களில், 180 புகார் மனுக்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. 38 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது’ என்றார்.
அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதைக் கருத்தில்கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.