

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முது மலை புலிகள் காப்பகம், 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப் பகுதி. இங்கு புலிகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. ஆண்டுதோறும் வன விலங்குக ளின் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கணக்கெ டுப்புப் பணி நேற்று தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறும் இதில் வனத்துறையினர், தன்னார்வ அமைப்பினர், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் 36 குழுக்களாக பிரிந்து செயல்பட உள்ளனர். இக்கணக்கெடுப்பில் வன விலங்குகளின் கால் தடம், எச்சம், மாமிச விலங்குகள், அரிய வகை மரங்கள், தாவரங்களை கணக்கெடுக்க உள்ளனர். அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணம் திண்ணி கழுகுகளையும் கணக்கெ டுக்க உள்ளனர். கணக்கெடுப்புப் பணி காரணமாக, காப்பகப் பகுதி யில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.